'தமிழக வெற்றிக் கழகம் 'TVK' என்று பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்'; தவெக Vs தவாக இடையில் மோதல்..!
The Tamizhaga Vaazhvurimai Katchi files a complaint seeking to prevent the use of the acronym TVK by the Tamizhaga Vettri Kazhagam
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் 09 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் 'TVK' என்ற பெயரை (அடையாளத்தை) பயன்படுத்துவது தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அதாவது, உண்மையான TVK நாங்கள் தான் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தினர் TVK என்பதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேணுகோபால் புகார் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள தியாகராய கல்லூரியில் பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பெரம்பூர் தொகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் மற்றும் அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தனர்.
அதன்படி, தவாகவேட்பாளர் வேணுகோபால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேரில் வந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதியப்பட்டு தேர்தல்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 2024 இல் தான் தொடங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டி பேசினார்.
இந்நிலையில் உண்மையான TVK நாங்கள் தான் என்றும், தமிழக வெற்றிக் கழகம் TVK என்பதை பயன்படுத்தக் கூடாது என 2024-லேயே புகார் அளித்துள்ளோம் என்றும் ஹெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக வெற்றிக் கழகம் TVK என்பதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக மிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The Tamizhaga Vaazhvurimai Katchi files a complaint seeking to prevent the use of the acronym TVK by the Tamizhaga Vettri Kazhagam