நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தீக்காயம்; படப்பிடிப்பில் பரபரப்பு..!
Actress Shilpa Shetty suffers burns during a film shoot
பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. மும்பையில் நடைபெற்று வரும் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சியின் போது, நடிகை ஷில்பா ஷெட்டியின் (49) முதுகில் எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்காயத்தினால் ஏற்பட்ட வலியால் துடித்த அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தனது காயத்தால் தயாரிப்பு செலவுகள் வீணாவதை விரும்பாத ஷில்பா ஷெட்டி, வெறும் 24 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்குத் திரும்பியுள்ளார். இதனால் படக்குழுவினர் பெரிதும் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஷில்பா செட்டி கூறுகையில், 'வேலை மீதான ஈடுபாடும் கடமை உணர்வுமே என்னை மீண்டும் படப்பிடிப்புக்கு வரவழைத்தது. காயம் ஏற்பட்டாலும் பணிகளைத் தள்ளிப்போட விரும்பவில்லை.' என்று பெரிய மனதுடன் தெரிவித்துள்ளார்.
அதாவது, லொகேஷன் வாடகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஊதியம் எனப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அவர் காயத்திலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Actress Shilpa Shetty suffers burns during a film shoot