'தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தால், இனி வேடிக்கை பார்க்க மாட்டோம் ஸ்டாலின்'; முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்..!
EPS warns the Chief Minister If personal attacks continue we will no longer stand idly by
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது;
அதிமுக ஆட்சியில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் தான் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், திருச்சிக்கு குடிநீர் தரக் கொண்டு வந்த 'நடந்தாய் வாழி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மறைந்த தலைவர்களை திமுகவினர்தான் கொச்சையாக பேசுவதாகவும் தான் அப்படி பேசியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் சிவா, பெருந்தலைவர் காமராஜரை பற்றி எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசினார். அதனை ஸ்டாலினால் கண்டிக்க முடிந்ததா? என்று கேள்வி எழுப்பியதோடு, ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் எவ்வளவு விமர்சித்தார்கள். தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தால், நாங்களும், எங்கள் கட்சியினரும் தகுந்த பதிலடி கொடுப்போம். இனி வேடிக்கை பார்க்கமாட்டோம் ஸ்டாலின் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், 'பணம், நகையை திருடுவார்கள். ஆனால், இந்த ஊர் எம்.எல்.ஏ. ஒருவர் கிட்னியை திருடுகிறார்' என்று குறிப்பிட்டதோடு, திமுக அரசு அமைத்த விசாரணை குழுவே, திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றது என்பதை தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், முறையாக விசாரித்து தவறு கண்டறியப்பட்டால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
English Summary
EPS warns the Chief Minister If personal attacks continue we will no longer stand idly by