பாலஸ்தீனத்தில் தொடரும் இஸ்ரேல் படையின் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு!!
Israel Attacks in Palastine
கடந்த ஆண்டில் இருந்து பால்ஸாதீனத்தின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் மீதான தாக்குதல் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் குடியேறிகளும் வன்முறை நிகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள கபர் நிமா என்ற கிராமத்திற்குள் வந்த இஸ்ரேல் படை நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. முதலில் கபர் நிமா கிராமத்தின் அருகே வந்த ஒரு கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படையினர், இதை தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள மக்களின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் படையின் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் இந்த தாக்குதலுக்கு முந்தைய நாளில் ஒரு தாக்குதல் நடந்ததாகவும், அந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்காகவே இஸ்ரேல் படை அந்த கிராமத்திற்கு சென்றதாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய வகையில் 4 பேர் ஒரு காரில் தப்பி செல்ல முயன்றதாகவும், மேலும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மேல் அவர்கள் காரை ஏற்றி கொல்ல முயன்றதாகவும், அதனாலேயே இந்த தாக்குதல் சம்பவத்தை இஸ்ரேல் படை நடத்தியுளளது என்று கூறியுள்ளது.
English Summary
Israel Attacks in Palastine