இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்! தொடை நடுங்கி போன ஈரான்! முக்கிய தலைவர்கள் இடமாற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் முதல் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. முதல்கட்டமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கி சாதனங்கள் வெடிக்கவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், இரு குழந்தைகள் உட்பட 37 பேர் பலியானதுடன், சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலக பகுதிகளில் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. 

இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64 வயது) உள்ளிட்டோர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா தெற்கு பிராந்திய கமாண்டர், ட்ரோன் பிரிவு கமாண்டர் என முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் தனது நாட்டு தலைவர்களை பத்திரமாக இடமாற்றம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை ஈரான் பத்திரமாக இடமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Attack lebanon Hezbollah death Iraq next action


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->