ஒரு கணத்தில் முடிந்த கனவு…! நெடுஞ்சாலையில் பைக் மற்றும் லாரி மோதி விபத்து...! - என்ஜினீயரிங் மாணவர் பலி - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியை சேர்ந்த உடையாரின் மகன் ரோஷன் (20), கோயம்புத்தூர் அருகே கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார்.

நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும், தனது மோட்டார் சைக்கிளில் பாலக்காடு நோக்கி புறப்பட்ட ரோஷன், சேலம்–கொச்சி எல்.என்.டி. பைபாஸ் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

பெட்ரோல் பங்க் அருகே தேன்பண்ணை பகுதியை கடந்தபோது, எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிளுடன் மோதியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், ரோஷன் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு கடுமையாக காயமடைந்தார்.

மேலும், ரத்த வெள்ளத்தில் உயிர் துடித்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த தகவலறிந்த மதுக்கரை காவல் நிலையம் காவலர்கள் விரைந்து சென்று உடலை மீட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், உயிரிழந்த ரோஷன், நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த செய்தி அவரது நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த சாலைப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக தெரிவித்த மக்கள், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dream come true instant Bike and lorry collide highway Engineering student dies


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->