#BREAKING || காஸா மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் அவசர எச்சரிக்கை.!
Israel army emergency message to Gaza people
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் இன்றோடு 22 வது நாள் எட்டியுள்ள நிலையில் இரு தரப்பிலும் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் அமைப்பில் வான்படைத் தளபதி இஸ்லாம் அபு ரூம்பே நேற்று இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலோடு தரைவழி தாக்குதலையும் தீவிரப் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துள்ள நிலையில் வடக்கு காஜாவில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தில் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் "காசா மக்களே.! உன்னிப்பாக கேளுங்கள். இது வடக்கு காசாவில் வாழும் மக்களின் உடனடி பாதுகாப்பிற்கான இஸ்ரேல் ராணுவத்தில் அவசர அறிவுரை. வடக்கு காசா மற்றும் காசா நகரில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தெற்கு காசாவை நோக்கி இடம் பெயருங்கள். இது தற்காலிகமானது மட்டும் தான்.
வடக்கு காசாவில் நிலைமை சீரானதும் கூடிய விரைவில் நீங்கள் வடக்கு காசாவில் குடியமர்த்தப்படுவீர்கள். ஹமாஸ் அமைப்பினர் உங்கள் உயிரை கேடயமாக பயன்படுத்தி குடியிருப்புகள், மசூதிகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றனர்.

இதனை சரி செய்ய இஸ்ரேல் ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. உங்களை வைத்து மிரட்டுவதே ஹமாஸ் அமைப்பினரின் நோக்கம். கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினர். இதில் ஒன்றும் அறியாத இஸ்ரேலிய ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
மேலும் பலர் கற்பழிக்கப்பட்டனர், உயிரோடு எரிக்கப்பட்டனர். அதனை எங்களால் மன்னிக்க முடியாது. மேலும் ஹமாஸ் அமைப்பினர் 200 இஸ்ரேலியர்களை கடத்திச் சென்றனர். எனவே வடக்கு காசா மற்றும் காசா நகரில் வாழும் மக்கள் தயவு செய்து உங்கள் பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி நகருங்கள். இது வெறும் முன்னெச்சரிக்கை அல்ல. காஸாவில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அவசர கோரிக்கை" என அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Israel army emergency message to Gaza people