இஸ்ரேல் வான்வழி தாக்குதல்... சிரியா - ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் 23 பேர் மரணம்.! - Seithipunal
Seithipunal


சிரியாவில் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இருப்பதாக, அந்நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகள் தொடர்பான தகவலை மறுக்கும் சிரியா, இஸ்ரேல் ஈரானின் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக கூறி வருகிறது. 

இந்த விஷயத்தில் சிரியாவிற்கும் - இஸ்ரேலிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்தால், சிரியா தனது வான்பாதுகாப்பு படையின் மூலமாக இஸ்ரேலின் விமானங்களை தாக்கி அழித்து வருகிறது. 

இந்நிலையில், சிரியாவில் உள்ள ஈராக்கின் எல்லையின் அருகே அமைந்துள்ள அல் சவுரி, மயாதீன் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், அல் சவுரி மற்றும் மயாதீன் நகர்களில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை கண்டறிந்து தாக்குதல் நடத்தியாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. 

இந்த தாக்குதல் சேத விபரம் தொடர்பாக இஸ்ரேல் தகவல் தெரிவிக்காத நிலையில், நடைபெற்ற தாக்குதலில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel Air Attack Syria Terrorist Place Border of Iran 13 Jan 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->