ஜனவரி 25-இல் தவெக செயல் வீரர்கள் கூட்டம்; 38 நாட்களுக்கு பின் அரசியல் மேடையில் விஜய்..!
TVK activists meeting on January 25
ஜனவரி 25-ஆம் தேதி தவெக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பின் விஜய் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பின் நடக்கப்போகும் நிகழ்ச்சியில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் வழங்காத நிலையில், இன்னும் வெளிவரவில்லை. இதுகுறித்தும் அவர் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். அத்துடன், கடந்த ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய இரு நாட்களும் சிபிஐ விசாரணைக்கு டெல்லியில், ஆஜராகி இருந்தார். இந்த விசாரணைக்கு பின் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் மூலமாக 38 நாட்களுக்கு பின் விஜய் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
TVK activists meeting on January 25