தமிழகம் முழுவதும் த.வெ.க. தேர்தல் பிரசார குழு சுற்றுப்பயணம் வரும் 26-ந்தேதி முதல் தொடக்கம்..!
The TVK election campaign teams tour across Tamil Nadu will begin from the 26th of this month
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தேர்தல் பிரசார குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அதன்படி, வரும் 26-ந்தேதி முதல் த.வெ.க. தேர்தல் பிரசார குழுவின் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. தேர்தல் பிரசார குழுவின் சுற்றுப்பயணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு;-
நாள் 01 : சென்னை (14 தொகுதிகள்), திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர்.
நாள் 02 : கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.
நாள் 03 : சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர்.
நாள் 04 : ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை.
நாள் 05 : திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி.
நாள் 06 : திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம்.
நாள் 07 : மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி.
நாள் 08 : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.
நாள் 09 : அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர்.
நாள் 10 : புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.
English Summary
The TVK election campaign teams tour across Tamil Nadu will begin from the 26th of this month