உக்ரைனில் மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ரஷியா; கடுங்குளிரால் பரிதவிக்கும் மக்கள்..!
Russia attacks power infrastructure in Ukraine
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் தொடங்கி 04 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது நவீன டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உக்ரைனில் கடுமையான குளிர்காலம் ஆகும். அங்கு மைனஸ் 20 டிகிரிக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. இந்த குளிர்காலத்தை தாங்குவதற்கு மக்கள் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால், மின்சாரம் இல்லாததால் கடுங்குளிரால் அவர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் 60 சதவீதம் இடங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாளியுள்ளன. இதனால், சுமார் 04 ஆயிரம் கட்டிடங்கள் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், ரஷியா அதிபர் புதினை அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்து பேச உள்ளார். அத்துடன், உக்ரைன் குழுவையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Russia attacks power infrastructure in Ukraine