அபிஷேக் சர்மாவின் ருத்ர தாண்டவம்; முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றுள்ள இந்தியா..!
India defeats New Zealand in the first T20 match and secures a victory
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 03 ஒருநாள் மற்றும் 05 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 02-01 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.

சஞ்சு 10 ரன்களில் ஆட்டழிந்தார். அதிரடியாக ஆடி சிக்ஸர், போர்ஸ் என பந்த பறக்கவிட்ட அபிஷேக் சர்மா, 84 ரன்கள் குவித்தார். இசான் கிஷன் 08 ரன்கள், அணியின் கேப்டன் சூரியகுமார் 32 ரன்கள், ஹர்திக் பாண்டியா 25, தூபே 09, ரிங்கு சிங் 44 ரன்கள், (ஆட்டமிழக்காமல்) அக்சர் படேல் 05, அரிஸ்தீப் சிங் 06, (ஆட்டமிழக்காமல்) என ரன் மழை குவித்தனர்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், ராபின்சன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராச்சின் ரவீந்திரா 01 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய பிலிப்ஸ் அதிரடி ஆடி, 40 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மார்க் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அரிஸ்தீப் சிங், அக்சர் படேல், ஹர்திக் தலை ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி சார்பாக, டப்பி, ஜேமிசன் தல இரண்டு விக்கெட்டுகளையும், கிளார்க், சோதி, சான்டர் தலை 01 விக்கெட்டினை வீழ்த்தினர். இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 02-வது டி20 போட்டி நாளை மறுதினம் ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
English Summary
India defeats New Zealand in the first T20 match and secures a victory