பழைய வீடுகளில் நடமாடுவது பேயா...? அறிவியலா...? - பல தலைமுறை மர்மத்திற்கு விடை கிடைத்துவிட்டது...!
Is it a ghost that haunts old houses Is it science answer multi generational mystery found
பேய், ஆவி போன்றவை உண்மையில் உள்ளதா என்பது குறித்து தெளிவான முடிவு இல்லாவிட்டாலும், அவற்றைச் சுற்றிய பயமும் கதைகளும் மனிதர்களின் மனதில் இன்னமும் ஆழமாக பதிந்துள்ளன. “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழிபோல், மனிதர்கள் அச்சம் நிறைந்த சூழலில் எதையும் தவறாக புரிந்து கொண்டு, அதனை மர்மமாக மாற்றி பரப்பும் நிகழ்வுகள் சமூகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, மக்கள் அசைவற்ற இடங்கள், சுடுகாடு சுற்றுப்புறங்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்ற இடங்களில் காணப்படும் சாதாரண நிழல்கள் கூட பேய்களின் நடமாட்டமாக கருதப்பட்டு வதந்திகள் பரவுவது வழக்கமாகியுள்ளது.இந்நிலையில், “பழைய கட்டிடங்களில் உண்மையிலேயே பேய்கள் சுற்றித் திரிகிறதா?” என்ற கேள்விக்கு கனடா ஆராய்ச்சியாளர்கள் புதிய விளக்கத்தை வழங்கியுள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இத்தகைய இடங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் விளக்கமறியாத பயமும் பதற்றமும், “இன்ஃப்ராசவுண்ட்” எனப்படும் குறைந்த அதிர்வெண் ஒலிகளால் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
மனிதக் காதுகளால் உணர முடியாத 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான இந்த அதிர்வெண் ஒலிகள், பழுதடைந்த குழாய்கள், காற்றோட்ட அமைப்புகள், பழைய இயந்திரங்கள் போன்றவற்றின் மூலம் உருவாகின்றன.
இந்த ஒலிகள் மனித உடலில் “கார்டிசோல்” எனப்படும் மனஅழுத்த ஹார்மோனை அதிகரித்து, காரணமின்றி பயம், பதற்றம், எரிச்சல் மற்றும் சோக உணர்வுகளை தூண்டும் தன்மை கொண்டவை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Is it a ghost that haunts old houses Is it science answer multi generational mystery found