அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கவுள்ளதா..? புதினை நேரில் சந்திக்கும் ஈரான் அமைச்சர்..!
Iranian Foreign Minister to meet Russian President Putin in person
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ், ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அத்துடன், குண்டுகளை வீசித் தாக்கும் அதி நவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன.
அத்துடன், போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Iranian Foreign Minister to meet Russian President Putin in person