ஹமாஸ் தூதருடன் ஈரான் அமைச்சக அதிகாரி திடீர் சந்திப்பு!! ரஷ்யா போடும் மாஸ்டர் ப்ளான்.!! - Seithipunal
Seithipunal


ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் தற்போது வரை 8,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க தயாராகி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்க துடுப்புகள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை மற்றும் தொடர்புடைய அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் தற்காப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் தொடங்கும் சூழல் நிலவி வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரான் ராணுவம் பெரிய அளவில் தரைப்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவும் தங்களின் வான்வழி பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தி வருகின்றது. ஈரான் அமெரிக்க தொகுப்புகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினால் அதனை சமாளிக்கும் வகையில் இந்த பாதுகாப்பை அதிகரித்து வருகிறது. 

இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவும் இந்த சமயத்தில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஹமாஸ் அமைப்பின் தூதரை ஈரான் அமைச்சர் சந்தித்து இருப்பது இந்த போரின் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைத் தலைவரை ஹமாஸ் தூதுக்குழுவின் பொலீட்பீரோ ஹீரோ உறுப்பினர் மர்சூக்கை ரஷ்யாவில் உள்ள ஈரான் நாட்டுக்கான தூதரகத்தில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் ஹமாஸ் அமைப்பிற்கு ரகசியமாக மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாங்குவது ஈரான் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

அமெரிக்க படைகளுக்கு எதிராக ஈரான் பெரிய அளவில் தரைப்படை தாக்குதலுக்கு பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த சூழலில் ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போரில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் கொண்டு உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவ வீரர்களை கொன்று குவித்தது. 

இதற்கு பழி தீர்க்கும் வகையில் ரஷ்யா மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு வழங்கி அமெரிக்க துடிப்புகள் மீது தாக்குதல் நடத்தி பழிதீர்க்க திட்டமிடுகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran official Meeting with Hamas Ambassador in Russia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->