இந்தோனேஷியா தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு! 12 பெண்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பெண்கள் பலியாகி உள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முறையாக உரிமம் பெறாமல், சட்டவிரோதமாக தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாண்டலிங் நடால் எனும் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்நாள் 14 பெண்கள் மண் தோண்டும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு 14 பெண்களும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்களை கைப்பற்றினர். இதில் 12 பெண்கள் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் பலியான அனைத்து பெண்களும் 30 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் முறையாக பயிற்சி பெறாத சுரங்க தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia gold mine landslide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->