கால்பந்து மைதானத்தில் 174 பேர் உயிரிழந்த விவகாரம்.. கால்பந்து கிளப்பிற்கு அபராதம் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் கடந்த சனிக்கிழமை கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பரம எதிரிகளான பெர்சிபயா சுரபயா அணியும், அரேமா மலாங் அணியும் மோதின.

இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெர்சிபயா சுரபயா அணி  3-2 என்ற கோல்கணக்கில் அரேமா மலாங் அணியை தோற்கடித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அரேமா மலாங் அணி ரசிகர்கள் பெர்சிபயா சுரபயா அணி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கலவரமாக மாறியது.

இதனையடுத்து இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வீசினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 174 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த கலவரம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், அந்த கால்பந்து கிளப்பிற்கு இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia football match riot football association fined


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->