இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறுநடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள்: பிரதமர் மோடி..!
Indian youth farmers fishermen MSMEs will benefit says PM Modi
இந்தியா பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறுநடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தடையற்ற ஒப்பந்தம் சாதாரண பொருளாதார ஒப்பந்தம் மட்டும் கிடையாது. பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் ஒரு புறம், இந்திய ஜவுளித்துறை, காலணி, நகைகள், நவரத்தினங்கள், பிரிட்டன் சந்தையை எளிதில் அணுக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு பிரிட்டனின் சந்தையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில்துறையினனுக்கு பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிரிட்டனில் தயாராகும் பொருட்கள் சாதாரண விலையில், இந்திய மக்களுக்கும் தொழில்துறையினருக்கும் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரிட்டன் பிரதமர் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு கையெழுத்தாகும் முக்கியமான மற்றும் பெரிய ஒப்பந்தம் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை இந்தியா செய்த ஒப்பந்தங்களில் விரிவான மற்றும் முழுமையான ஒன்றாக இது இருக்கும் எனவும், இதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தத்தால், இரு நாடுகளின் வருமானம் அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்க்கை தரம் உயரும். ஊழியர்களின் பைகளில் பணம் சேரும் என்றும் தெரிவித்துள்ளார். வேலைக்கும், வர்த்தகத்துக்கும் சிறப்பானதாக இருப்பதுடன் வரியை நீக்குவதுடன், வர்த்தகத்தை எளிதாகவும் மாற்றுகிறது பிரிட்டன் ஊழியர்களுக்கு சிறந்ததாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரிட்டனில் விற்பனையாகும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்களும் பயனடைவார் எனவும் நீண்ட காலத்துக்கு பலன் அளிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Indian youth farmers fishermen MSMEs will benefit says PM Modi