ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கும் இந்தியா..!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் கடுமையான உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறது. சுமார் 6 மில்லியன் மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் பணிக்குழுவின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்தியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த கூட்டத்தின் முடிவில் ஐ.நா உலக உணவு திட்டத்தின் கீழ், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமையை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் மண்ணை எந்தவித பயங்கரவாத செயல்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் கடந்த ஆண்டு ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு 50000 டன் கோதுமையை இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India gives 20000 metric ton wheat to Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->