14 வயது இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதமாற்றம்.. நான்கு மடங்கு வயதான நபருடன் திருமணம்.! பாகிஸ்தானில் அரங்கேறும் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவது உலக நாடுகள் அறிந்த விஷயமாகும். எல்லைப்பகுதியில் நடைபெறும் தாக்குதல், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் நகர்களில் தீவிரவாத தாக்குதல் என்று தொடர்ந்துகொண்டே செல்கிறது.

இந்தியா மதசார்பற்ற நாடாக இருந்து வந்த நேரத்திலும், இந்தியாவில் பல மதங்கள் இருந்து கொண்டு இருந்தாலும், பிற மதங்களை சார்ந்த நபர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கும் சட்டங்கள் இருக்கிறது. 

இந்தியாவை பொறுத்த வரையில் உள்நாட்டில் பல சட்ட தீர்திருத்தங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் கொண்டு வரப்படும் நேரத்தில், பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் இந்து இளம்பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் போன்ற பிரச்சனைகள் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே இந்து மதத்தினை சார்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதும், பின்னர் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வயது அதிகமான முஸ்லீம் நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் இருக்கும் யாக்கோபாபாத் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயதுடைய மேகா குமாரி என்ற சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இவரை காணாது தேடியலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டதும், பின்னர் சிறுமியை விட நான்கு மடங்கு வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Pakistan Hindu child girl kidnapped and covered Muslim to final marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->