மீண்டும் தாக்குதல் நடத்தும் ஈரான்.. குறியாகும் அமெரிக்க படைகள்.!! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டின் அண்டை நாடாக இருக்கும் ஈராக்கில் அமெரிக்க படைகள் தளம் உள்ளது. இங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசா மற்றும் எர்பில் விமானப்படை தலத்தில் அமெரிக்க இராணுவத்துடைய தளங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில்., அல்-ஆசாத் மற்றும் எர்பில் விமானப்படை தளத்தில் கடந்த 8 ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்., சுலைமானி கொலைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அல்-ஆசாத் விமானப்படை தளத்தினை சுமார் 17 ஏவுகணைகள் மற்றும் எர்பில் விமானப்படை தளத்தினை 5 ஏவுகணையும் தாக்கியதாக கூறிய நிலையில்., இந்த தாக்குதலின் போது 80 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 

மேலும்., இந்த தாக்குதலில் அமெரிக்க படையினை தாக்கியதாகவும்., தங்களின் இராணுவ அதிகாரிகளுக்கு உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதலை உலக நாடுகள் கண்டித்து இருந்தது.

இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்., இரு தரப்பையும் அமைதிக்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்., ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகருக்கு வடக்கே அமைந்துள்ள பலாட் அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சுமார் 8 ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில்., இந்த தாக்குதலில் ஈராக் நாட்டினை சார்ந்த 4 இராணுவ வீரர்கள் மட்டும் காயம் அடைந்துள்ளதாகவும்., தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்த நிலையில்., பின்னர் பணியை கவனிக்க சென்ற நேரத்தில் ஏவுகணை விழுந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in iran america army base attack


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->