விமான எஞ்சினின் கூம்பு அமைப்பில் ஏற்பட்ட சேதம்.! வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!!  - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகம் முழுவதும் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., என்னதான் வளர்ச்சியடைந்த தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் இருந்தாலும் விபத்துகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் உலகம் முழுவதும் நொடிப்பொழுதிற்கு பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்., விமான விபத்துக்களானது அவ்வப்போது ஏற்பட்டு பல பயணிகள் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களையும்., நண்பர்களையும் இழந்து வாடி வருகின்றனர். விமான விபத்துகள் கடந்த சில வருடங்களாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

flight, flight crash,

இந்த சமயத்தில்., விமான விபத்துகள் பெரும்பாலும் இயற்கையின் தாக்கத்தாலும்., சில சமயம் விமான இயந்திர கோளாறுகள் காரணமாகவும் நிகழ்கிறது. விமானங்கள் பயணிக்கும் திசையில் சற்றும் எதிர்பாராத விதத்தில் மாறும் காலநிலையில் சில சமயம் எதிர்பாராத விதமாக விமானங்கள் விபத்துகளில் சிக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. 

இதனைப்போன்று விமான இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக நடுவானிலேயே விமானங்கள் செயலிழந்து விபத்திற்குள்ளாகிறது. விமானத்தின் எஞ்சின் பாகத்தில் இருக்கும் கூம்பு வடிவ அமைப்பானது சிதைந்து., விமானத்தின் என்ஜினுக்குலேயே சுற்றிக்கொண்டு வரும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விமானம் மற்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல் வெளியாகாத நிலையில்., அட்லாண்டாவிலிருந்து பால்டிமோர் செல்லும் ஒரு டெல்டா விமானம் வட கரோலினாவில் இயந்திரத்தின் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது என்ற செய்தி மட்டும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான பிற விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Atlantic country flight engine crash and got emergency landed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal