பாகிஸ்தானில் அரசு கவிழ்ந்தது.. பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் பதவி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 1:30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் குறைந்தது 172 உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவரின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு கவர்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்தும் இம்ரான்கான் நீக்கப்பட்டார் இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imran Khan resign from Pakistan pm posting


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->