“இந்தியா-பாகிஸ்தான் போரை நான் முடித்து வைத்தேன்!” – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!
I ended the India-Pakistan war Trump asserts again
ஒரு மாதத்திற்கு ஒரு போரை முடித்து வைத்தேன்” எனத் தம்முடைய சக்தியை சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் சூழ்நிலையைத் தாங்களே முடிவுக்கு கொண்டு வந்ததாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் ராணுவ தளங்களைத் தாக்கியது. இதனால் இரு நாடுகளும் நேரடி மோதல் நிலைக்கு சென்றிருந்தன.
அப்போது தாமே நடுநிலையுடன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இந்திய அரசு இதனை மறுத்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த சூழலில், டிரம்ப் தனது சமீபத்திய சமூகவலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:“இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ-ருவாண்டா போன்ற பல போர்களைத் தலையிட்டு தீர்த்தேன்.
ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்தேன். இது மூலம் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.டிரம்பின் இந்த அறிக்கை, மீண்டும் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
English Summary
I ended the India-Pakistan war Trump asserts again