மதத்தால் நான் இந்து அல்ல! தர்மத்தால் நான் இந்து! - ராஜமௌலி! - Seithipunal
Seithipunal


இந்து என்பது மதம் என்று நினைக்கிறார்கள்! ஆனால் அது தர்மமாக இருந்தது!

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட், அஜய் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தற்பொழுது களமிறங்கியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமௌலி அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதம் குறித்து சித்தரிப்பு அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குனர் ராஜமவுலி "அனைவரும் இந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தான் அது மதம். ஆனால் இந்து மதத்திற்கு முன்பு இந்து தர்மம் இருந்தது. இந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் நான் இந்து அல்ல. தர்மமாக பார்த்தால் நான் தீவிர இந்து தான். நான் படத்தில் காட்டுவது அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கை முறையை தான் காட்டியுள்ளேன். இந்து தர்மம் "வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும்! வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என போதிக்கிறது!. நான் இந்து தர்மத்தை பின்பற்றுகிறேன்" என பேசியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am not a Hindu by religion I am a Hindu by Dharma said by Rajamouli


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->