அடக்கடவுளே..! திறந்த சில நாட்களிலேயே தகர்ந்த ஹாங்கி பாலம்...! – சீனாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவ
Hongqi Bridge collapsed within few days opening shocking incident China
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் திபெத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஹாங்கி பாலம், சமீபத்தில் பிரம்மாண்ட விழாவுடன் திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
விபத்து விபரம்:
திபெத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் அருகே ஏற்பட்ட மலைச்சரிவு காரணமாக, ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையம் அருகிலுள்ள பாலத்தின் பகுதி உடைந்து ஆற்றுக்குள் சறுக்கியது.

அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் பெரும் போக்குவரத்து இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து வாகனப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வீடியோ பரபரப்பு:
பாலம் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. “புதிதாக திறந்த சில நாட்களிலேயே இப்படியொரு சம்பவம்!” என்று பலரும் அதிர்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவின் கட்டுமான தரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் இந்த நிகழ்வு, பாலம் திறப்பிலிருந்து இடிபாடாக மாறிய அதிர்ச்சிக் கதை என சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Hongqi Bridge collapsed within few days opening shocking incident China