விமான விபத்தில் தனது 2 மகள்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், தனது 2 குழந்தைகளுடன் விமானத்தில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 

இந்த சம்பவம் கரீபியன் கடல் பகுதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'தி குட் ஜெர்மன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிறிஸ்டியன் ஆலிவர். 

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆக்சன்-காமெடி படமான 'ஸ்பீடு ரேசர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீருக்கு அடியில் உயிரிழந்தவர்களின் உடல்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில் ஆலிவர், அவரது மகள்கள் மமிதா (வயது 10), அன்னிக் (வயது 12) மற்றும் விமானி என நான்கு பேரின் உடல்களையும் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

இந்த கொடூர விபத்து, பெகுய்யா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா என்ற இடத்திற்கு புறப்பட்டபோது ஏற்பட்டுள்ளது. 

கிறிஸ்டியன் ஆலிவர் ஆரம்ப காலங்களில் டி.வி. தொடரில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hollywood actor 2 daughters killed plane crash


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->