ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: ஐந்து பேர் பலி!
helicopter crash Russia
ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில், கே.ஏ.-226 (Ka-226) ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஏழு பேரில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமான உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட ஏழு பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்திற்கு அருகே தரையிறங்க முயன்றபோது, திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், தரையில் விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த ஐந்து பேர் உடல் சிதறி பலியாகினர். படுகாயமடைந்த மற்ற இரண்டு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.