முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. சிறுவயதில் செய்த கொடூரத்திற்கு, அடங்கும் வயதில் கம்பி என்னும் ஹாலிவுட் தயாரிப்பாளர்..!! - Seithipunal
Seithipunal


படத்தில் நடிக்க படவாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை பலவந்தமாக படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பரபரப்பு புகாரை நடிகை ஏஞ்சலினா ஜூலி உட்பட சுமார் 80 க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதனைப்போன்று நடிகை ரோஸ் மெக்கோவன், அனபெல்லா போன்ற பல நடிகைகளும் தொடர் பாலியல் குற்றசாட்டை முன்வைக்கவே, இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில் பகீர் தகவல் வெளியவந்துள்ளது. 

அனபெல்லா சியாரா "தி சோபிரானோஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நிலையில், தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் பாலியல் கொடூரன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நேரத்தில், வலிப்பு நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது போன்று உணர்ந்ததாக கண்ணீர் மல்க நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

கடந்த 1990 ஆம் வருடத்தின் துவக்கத்தில் நான் வசித்து வந்த நியூயார்க் குடியிருப்பில் இருக்கும் தனது இல்லத்தில் வெயின்ஸ்டீன் நுழைந்த நேரத்தில், நான் ஒரு இரவு ஆடை அணிந்திருந்தேன். என்னை பாலியல் ரீதியாக கொடூரமாக தாக்கிய வெயின்ஸ்டீன் பிடியில் இருந்து தப்பிக்க அவரை அடித்து உதைத்தேன். 

அவனது பிடியில் இருந்து விலக இயலாமல் தவித்த என்னை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததில், எனது உடலானது மிகவும் அசாதாரண முறையில் நடுங்க துவங்கி, என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு சித்ரவதைக்கு உள்ளானேன். எனது கையினை தலைக்கு மேலே தூக்கிப்பிடித்து, என்னை விட 3 மடங்கு எடையிருந்த வெயின்ஸ்டீன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். 

இந்த குற்றம் நடந்து பல வருடங்கள் கடந்தாலும், கடந்த 2017 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதம் "தி நியூயார்க்கர்" பத்திரிகையில் இருந்து தொடர்பான தகவல் வெளியாகாதவரை எனது உயிருக்கு பயந்ததால், இது தொடர்பாக யாரிடமும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 67 வயதாகும் ஹார்வி வெயின்ஸ்டீன் இந்த குற்றசாட்டை ஏற்க மறுத்து கருத்துக்களை பதிவு செய்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஹார்வி மீதான புகாருக்கு திரைப்பட நடிகைகள் மற்றும் உதவி தயாரிப்பாளர் என பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு நடந்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து இவருக்கு தற்போது அமெரிக்கா நீதிமன்றம் 23 வருட சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harvey Weinstein sexual abuse case court judgement 23 years jail for sexual abuse case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->