கைகொடுத்த சந்திப்பு?இந்தியா மீதான வரிக்கு விலக்கு? முடிவுக்கு வருகிறது ரஷ்யா-உக்ரைன் போர்! வெளியான முக்கிய தகவல்!
Handshake meeting Tax exemption for India Russia Ukraine war is coming to an end Important information released
உக்ரைன்–ரஷ்யா போர் நீண்டுகொண்டே வரும் நிலையில், சமாதானத்திற்கான முக்கிய முன்னேற்றம் எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை “போரை நிறுத்த வந்த தேவ தூதர்” எனக் கூறி, உக்ரைன்–ரஷ்யா விவகாரத்தை மேற்கோளிட்டு இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியும் விரைவில் ஹங்கேரியில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இது நடைமுறைக்கு வந்தால், போரை முடிவுக்குக் கொண்டு செல்லும் வழிகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனை நேட்டோவில் இணைக்க வேண்டும் என்பது ஜெலன்ஸ்கியின் கோரிக்கையாகும். ஆனால் இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதே அதற்கான காரணம். இதுவே போர் தொடங்கிய முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு மிகப்பெரிய நிதி ஆதரவாக உள்ள கச்சா எண்ணெய் விற்பனை தான் அமெரிக்காவுக்கு சிக்கலாகியுள்ளது. குறிப்பாக இந்தியா, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளராக இருப்பதால், அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால் இந்தியா அதை ஏற்காததால், தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதினும் ஜெலன்ஸ்கியும் ஹங்கேரியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தால், போர் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. அதோடு, இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய வரியும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Handshake meeting Tax exemption for India Russia Ukraine war is coming to an end Important information released