கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. 20 மாத குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியான கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 4 அங்குலவிட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால், சாலையில் நடந்து சென்றவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

பத்து நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. கற்களைப் போல விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகளின் மேற்கூரைகள், மின் கேபிள்கள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.

ஆலங்கட்டி மழை விழுந்ததில் ஜிரோனா என்ற 20 மாத குழந்தையின் மண்டை உடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.கேட்டாலோனியாவில் மார்ச் மாதம் ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கம்.

ஆனால், இந்த அளவிற்கு பெரிய ஆலங்கட்டிகள் பலத்த காற்றுடன் தாக்கியது 2002-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே தாக்கிய ஆலங்கட்டி மழையில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் பலத்த ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

ஆலங்கட்டி மழை பெய்தது குறித்து இசைக்கலைஞர் சிகஸ் கார்பனெல் கூறுகையில், "ஆலங்கட்டி மழை பெய்யவும் மக்கள் கூச்சலிடவும், ஒளிந்துகொள்ளவும் தொடங்கினர். டென்னிஸ் பந்துகள் அளவில் விழுந்த ஆலங்கட்டியால் சாலையில் சென்ற பலர் படுகாயமடைந்தனர். கார் கண்ணாடிகள் உடைந்தன" என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hailstorm in Spain child death


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->