நல்ல செய்தி.! புற்றுநோய் தடுப்பூசியில் அடுத்த முன்னேற்றம்.! அசத்திய ஆராச்சியாளர்கள்!மனிதப் பரிசோதனை – ரஷ்யாவில் தொடக்கம் - Seithipunal
Seithipunal


உலகளவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவ உலகையே சவாலில் ஆழ்த்தி வரும் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் ரஷ்யா ஒரு படி முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் புற்றுநோய்க்கான mRNA தடுப்பூசியை உருவாக்கியதாக ரஷ்யா அறிவித்தது. தற்போது, அந்த தடுப்பூசி மனிதப் பரிசோதனைக்குத் தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் ரஷ்யாவில் முதல் கட்ட மனிதப் பரிசோதனைகள் தொடங்க உள்ளன.

முன்னதாக விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை சுமார் 80 சதவீதம் வரை தடுக்க முடிந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கணையம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற புற்றுநோய்களில் இது பலனளிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மனிதப் பரிசோதனைகள் வெற்றியடைந்தால், ரஷ்யா தனது குடிமக்களுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது சுமார் 40 லட்சம் புற்றுநோய் நோயாளிகள் உள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். எனவே, இந்த தடுப்பூசி அவசரத் தேவையாகியுள்ளது. ஆனால், பிற நாடுகளுக்கு இந்த தடுப்பூசி அதிக விலைக்கு விற்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 லட்சம் புதிய நோயாளிகள் பதிவாகின்றனர். மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. 2020 முதல் 2040 வரை புற்றுநோய் பாதிப்பு 57 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதர்களில் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டால், அது புற்றுநோய் சிகிச்சை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news The next breakthrough in cancer vaccine Amazing researchers Human trials begin in Russia


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->