காசா அமைதி திட்டம்: காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது.. அமெரிக்கா முன்வைத்த பாயிண்ட் திட்டம் கவனம் ஈர்க்கிறது! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மோசமான சூழல், குறிப்பாக காசாவில் தொடரும் போராட்டம், உலகின் கவலையை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதலால் காசா பகுதி மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா 21 பாயிண்டுகளை கொண்ட ஒரு விரிவான திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. காசா பகுதி தீவிரவாதம் இல்லாத, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலில்லாத ஒரு அமைதியான மண்டலமாக மாற்றப்படும்.

  2. காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

  3. இரு தரப்பும் ஒப்புக்கொண்டவுடன், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட்டு, இஸ்ரேல் படிப்படியாக காசாவிலிருந்து பின்வாங்கும்.

  4. இஸ்ரேல் சம்மதித்த 48 மணி நேரத்திற்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த பணயக்கைதிகள் அனைவரும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.

  5. அதன் பின்னர், இஸ்ரேலில் சிறையில் உள்ள பல நூறு பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் போர் தொடங்கிய பின் கைது செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.

  6. அமைதியாக வாழ விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்; வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான பயண வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.

  7. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும் தினசரி 600 லாரிகள் அளவுக்கு மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு அனுப்பப்படும்.

  8. உதவிப் பொருட்கள் விநியோகம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் மட்டுமே நடைபெறும்.

  9. பாலஸ்தீனர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாகம் காசாவில் அமைக்கப்படும். இதை அமெரிக்கா தலைமையிலான அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சர்வதேச குழு கண்காணிக்கும்.

  10. காசாவின் நகர வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருளாதாரத் திட்டம் தொடங்கப்படும்.

  11. சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு, பங்கேற்கும் நாடுகளிடம் குறைந்த வரி வசூலிக்கப்படும்.

  12. காசா மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றாது; வெளியேறியவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கான உரிமை வழங்கப்படும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், காசாவில் நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டும் திட்டத்திற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதில்தான் அதன் வெற்றி சார்ந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gaza Peace Plan Israel will not occupy Gaza The US proposed Point Plan is attracting attention


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->