தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை.? அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா அதிகரித்து வருவதால் இன்று முதல் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மூடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஜனவரி 17 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு எப்போது பூங்கா திறக்கப்படும் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் நிலையை ஆய்வு செய்து எப்போது திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

From today not allowed in parks


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->