பொது வெளியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கன்னத்தில் அறைந்த மனைவி..? இணையத்தில் வைரலாக வீடியோ..!
French President Macron wife slaps him in public Video goes viral on the internet
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான். தற்போது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் வியட்நாமுக்கு அவர்கள் வந்திறங்கினார்.
இந்நிலையில் இமானுவேல் மேக்ரான் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வியட்நாம் தலைநகர ஹனோயில் விமானம் தரையிறங்கி போது, இமானுவேல் மேக்ரானின் விமானத்தின் கதவு திறந்தது. உள்ளே இருந்து மனைவி பிரிஜிட் மேக்ரானுடன், இமானுவேல் மேக்ரான் வெளியே வர தயாராகி இருந்தார். அப்போது திடீரென இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைவது போல வீடியோவில் உள்ளது. ஆனால், பிரிஜிட் மேக்ரானின் முகம் வீடியோவில் தெரியவில்லை.
ஏனெனில், விமானத்தில் கதவுகள் அவரை மறைத்துள்ளது. அவரது கை ஆக்ரோஷமாக இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைவது போல் அந்த வீடியோவில் உள்ளது. அதோடு இமானுவேல் மேக்ரான் மீது அவர் மனைவியின் முகம் இறுக்கமாக இருப்பதை அந்த வீடியோவை பார்ப்பதால் தெரிகிறது.
இந்நிலையில், பொதுவாக தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியுடன் கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்குவார்கள். ஆனால், நேற்றைய தினம் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானிடம் கைகோர்க்க கையை நீட்டுவார். ஆனால் மனைவி பிரிஜிட் மேக்ரான் அதனை கண்டுக்கொள்ளாமல் விமான படிக்கட்டில் இறங்கி வருவதாக தெரிகிறது. இதனை பார்த்து சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையே பிரச்சினை உள்ளது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
French President Macron wife slaps him in public Video goes viral on the internet