பலுசிஸ்தான் சந்தையில் வெடிவிபத்து : 4 பேர் பலி - 10 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் இருந்து நிறைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, போலீசார் விசாரணைக்காக சம்பவ பகுதியை சுற்றி வளைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பர்கான் துணை ஆணையர் அப்துல்லா கோசோ டான் தெரிவித்ததாவது, "ரக்னி மார்க்கெட் பகுதியில் இருசக்கரவாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் விபத்து ஏற்பட்டது" என்றுத் தெரிவித்துள்ளார். 

இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில், ரத்தம் சொட்ட சொட்ட பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் செல்வதைக் காட்டுகிறது. மேலும், பழுதடைந்த வாகனங்களும், காய்கறிகளும் சாலையில் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. 

இந்த நிலையில், பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து, "குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்துபவர்கள் மனித குலத்தின் எதிரிகள். பயங்கரவாதிகள் தங்கள் தீய இலக்குகளை அடைய நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறார்கள். 

ஆனால், அரசு தீய விரோத சக்திகளை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சரிடம் அறிக்கை கோரியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died and ten peoples injury for bomb blast in balochistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->