பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். 

ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 'டோஸ்' தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former President of Pakistan Asif Ali Zardari is confirmed to be infected with Corona


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->