அமெரிக்கா கென்டகி மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு: 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உருவான புயல் காரணமாக கென்டகி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் வீடுகள் மற்றும் சாலைகளில் வெள்ள நீரில் மூழ்கி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகின்றன. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளின் தேசிய பாதுகாப்பு படையினர் வான் மற்றும் நீர் வழியே நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கை ஒரு பேரிடர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும் கென்டகியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டிய அதிகளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood lashesout in kentucky in america


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->