ஆப்கானிஸ்தான்: மீண்டும் நடைமுறைக்கு வந்த கசையடி தண்டனை.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள் ​​தாங்கள் கடுமையாக ஷரியா சட்டத்தை அமல்படுத்தி ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தலிபான்கள் ஏற்கனவே 1996 மற்றும் 2001-க்கு இடையில் குற்றவாளிகளை தண்டிக்க கையாண்ட முறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர். 

மேலும் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்புவிடுத்தது. 

இதையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் வைத்து ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flogging Punishment Reintroduced in Afghanistan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->