மகிழ்ச்சியான செய்தி! மும்பை வந்தடைந்தது முதல் கச்சா எண்ணெய் கப்பல்...! - எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - இஸ்ரேல் படைகளுடன் ஈரான் போரில் ஈடுபட்டுள்ள சூழலில், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளது.

இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவிய நிலையில், இந்தியாவின் ராஜதந்திர முயற்சியால் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் அந்த வழித்தடத்தில் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, இந்தியாவின் புஷ்பக் (Pushpak) மற்றும் பரிமல் (Parimal) ஆகிய கப்பல்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியை கடந்தன.

இதன் முதற்கட்டமாக, வளைகுடா நாட்டிலிருந்து கச்சா எண்ணெயுடன் வந்த முதல் கப்பல் மும்பை துறைமுகத்தைச் சென்றடைந்தது.

இந்த வருகையால், இந்தியாவில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் LPG பற்றாக்குறை விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

first crude oil tanker arrived Mumbai end fuel shortage


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->