ஈரானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டது.! - Seithipunal
Seithipunal


ஈரானில் நேற்று மாலை ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

ஈரான் தெற்கு பகுதியில் நேற்று அமீரக நேரப்படி மாலை 6.15 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் அமீரக தேசிய வானிலை மையத்தின் தகவலின்படி ஈரான் நில நடுக்கம் துபாய் வழியாக கடந்து சென்றாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் உள்ள சான்ட்லர்ஸ் தொங்கும் விளக்குகள் வேகமாக அசைந்ததை பார்த்ததாகவும், சிலர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அதிர்வை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Felt in UAE after earthquake strikes Iran


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->