பெரியார் உலகமயமாகிவிட்டார்...தந்தை பெரியாருக்கு பிடித்த சொல் சுயமரியாதை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Father Periyar favorite word was self respect Chief Minister MK Stalin speech
லண்டன்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:“பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கான சான்று தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது திருவுருவப் படம் திறக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கி வரும் கல்வி நிறுவனத்தில் இன்று பெரியாரின் நினைவு நிலைநிறுத்தப்பட்டது என்பது மிகப்பெரும் பெருமை.
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கான அடையாளம் தான் இந்த நிகழ்வு.
பகுத்தறிவு பகலவன் பெரியாரின் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தது என் வாழ்நாள் பெருமை.
சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர் பெரியார். ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் பெரியார்.
பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
பெரியாருக்கு மிகவும் பிடித்தமான சொல் “சுயமரியாதை” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஒட்டி நடந்த இந்த நிகழ்வு, தமிழர்களுக்கும், உலகளாவிய அளவில் பெரியாரின் சிந்தனைகளுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.
English Summary
Father Periyar favorite word was self respect Chief Minister MK Stalin speech