நேபாளத்தில் நிலநடுக்கம்; இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது; அச்சத்தில் மக்கள்..!
Earthquake in Nepal felt in northern states of India
நேபாளத்தில் இன்று இரவு 07.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 20 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. இதனால் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் 03 ஆயிரத்து 1மேற்பட்டோர் உரியிழந்துள்ளனர். அத்துடன், தாய்லாந்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதே நேரத்தில் ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Nepal felt in northern states of India