ஈரான் : ராணுவ தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்குவதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

இதனால் இவ்விரு நாடுகளுக்கும் அவ்வப்பொழுது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம், ஈரான் தலைநகர் டெஹ்ரானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் இயங்கும் ராணுவ தொழிற்சாலையின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகளுடன் 3 ட்ரோன்கள் ராணுவ தொழிற்சாலையை நோக்கி வந்ததாகவும், அவற்றில் இரண்டு ட்ரோன்கள் வானிலேயே வெற்றிகரமாக இடமறித்து அழிக்கப்பட்ட நிலையில் ஒரு ட்ரோன் மட்டும் தொழிற்சாலைக்குள் விழுந்து வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ட்ரோன் வெடித்ததில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தாக்குதலில் உயிர்சேதமோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone attack on Iran military factory


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->