ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்; லெபனானில் 77 பேர் உயிரிழப்பு; 500-க்கும் மேற்பட்டோர் காயம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அணுஆயுத ஒப்பந்தத்தை நிராகரித்த நிலைஇழு, அணு ஆயுத போட்டி காரணமாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சேர்ந்து கடந்த சனிக்கிழமை முதல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் 700க்கும் அதிகமானோர் ஈரானில் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 04 நாட்களாக தாக்குதல் வருகிறது.

லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 04 நாட்களாக தாக்குதல் வருகின்ற நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 77 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 04 நாட்களில் மட்டும் 77 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 07 குழந்தைகள் அடங்குவர். சுமார் 527 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் ஹிஸ்புல்லாவை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இன்று தெற்கு லெபனானில் உள்ள நபதியே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் உட்பட மொத்தம் 08 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானில் இருந்து இதுவரை சுமார் 83,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

77 killed and over 500 injured in Israeli attack on Hezbollah in Lebanon


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->