சீனாவின் பிக் டேட்டா எக்ஸ்போவில் ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்...! - Seithipunal
Seithipunal


சீனாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் சமீபத்திய சாதனைகளை வெளிப்படுத்துவதற்கான இன்டர்நேஷனல் பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போ சீனாவின் குய்யாங் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த எக்ஸ்போவில் புதிய வகை ட்ரோன்கள், வி.ஆர் தொழில்நுட்பம்,மெய்நிகர் நிலப்பரப்பு, 3டி பிரிண்டர், ரோந்து கார்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்டுநர் இல்லாத கார் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த கார் விசாலமாக உட்காரும் வசதியுடன் ஸ்டேரிங் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 4 லேசர் ரேடார்கள், 7 கண்ணாடிகள் மற்றும் 12 மில்லி மீட்டர் அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சில வருடங்களில் இந்த வகை கார்கள் வணிக பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driverless car introduced in China big data industry expo


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->