வானில் நடந்த காரசாரமான கணம்…தரையில் இரங்கலாக மாறியது...! தேஜஸ் விபத்து விவரம் வெளியானது!
dramatic moment sky turned into mourning ground Details Tejas accident revealed
துபாயில் உள்ள அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே அமைந்துள்ள துபாய் வேர்ல்டு சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற விமானக் கண்காட்சி, இறுதி நாளில் பரபரப்பாக முடிந்தது. வழக்கம் போல சாகச விமானப் பறப்புகள் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் திடீர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வானில் பறந்துகொண்டிருந்த தேஜஸ் போர் விமானம், சாகசம் செய்யும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து ஒரு கணத்தில் தீப்பிடித்தது.

இந்த துயரமான விபத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த தைரியசாலி விமானி நமன் சியால், சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்.இந்த துயர சம்பவத்துக்கான காரணம் குறித்து விமான நிபுணர்கள் விரிவாக மதிப்பீடு செய்துள்ளனர்.
அவர்களது ஆரம்பகாலக் கணிப்பில், விபத்துக்கு முன் விமானம் "பேரல் ரோல்" (Barrel Roll) எனப்படும் ஒரு வான்சாகச செயல்முறையை முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுவாக ஒரு சுழலும் வட்ட வடிவ சாகச இயக்கம்; தொழில்நுட்ப ரீதியில் சிக்கலானது அல்ல. ஆனால் மிக நுணுக்கமான கணக்கீட்டு திறன் அவசியமான செயல்.சாகசத்தின் போது விமானம் சில விநாடிகள் தலைகீழாக பறந்த பின் மீண்டும் மேலே எழும்ப வேண்டியது.
ஆனால் தேஜஸ் விமானம் அந்த உயரத்தைப் பெற முடியாமல், தரைக்கு மிக அருகில் இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே சரிந்ததாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிக வேகத்தில் சாகச இயக்கங்களை மேற்கொள்ளும் போது மிகச் சிறிய கணக்குப் பிழையும் பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதும் அவர்கள் விளக்கம்.
மேலும், விமானம் திடீரென தள்ளுப்பொறி (thrust) சக்தியை இழந்திருப்பது, அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்த விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப நிகழ்வு தானா? மனித பிழையா? அல்லது வேறு எதுவா? என்ற கேள்விக்கு, முழு விசாரணை முடிந்ததற்கு பின் மட்டுமே துல்லியமான பதில் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
English Summary
dramatic moment sky turned into mourning ground Details Tejas accident revealed