விஜய் பேச்சை பொருட்படுத்தவேண்டாம்! கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்- விஜய்க்கு இலங்கை மந்திரி பதிலடி!
Donot pay attention to Vijay speech We will never give up Katchatheevu to India Sri Lankan minister response to Vijay
மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்,“தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு – மத்திய அரசு கச்சத்தீவை மீட்டுக்கொடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.இந்தக் கருத்துக்கு பதிலளிக்க இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:“முதலில், கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு. அது ஒருபோதும் மாறப்போவதில்லை.தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் கச்சத்தீவு குறித்த பேச்சும் அடங்கும்.
இது முதல் முறை அல்ல. பலமுறைவே தேர்தல் பிரசாரங்களில் கச்சத்தீவு விவகாரம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உரைகளால் எதுவும் மாறப்போவதில்லை.நடிகர் விஜய் தேர்தல் மேடையில் கச்சத்தீவைப் பற்றி பேசியதை நானும் பார்த்தேன். ஆனால் அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.”
மேலும் அவர் வலியுறுத்தியதாவது:
“இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ராஜதந்திர ரீதியாக ஒருபோதும் மாறவில்லை. இன்று, நாளை, என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த காரணத்திற்காகவும், எந்த ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலும் அதை இந்தியாவுக்கு வழங்க மாட்டோம். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால் அதனை கவனத்தில் கொள்வோம். ஆனால் தேர்தல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்தவே தேவையில்லை,” என்றார்.
English Summary
Donot pay attention to Vijay speech We will never give up Katchatheevu to India Sri Lankan minister response to Vijay