"நான் திரும்ப வந்துவிட்டேன்" முகநூலில் தெறிக்கவிட்ட டொனால்டு ட்ரம்ப்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தவர் டொனால்டு ட்ரம்ப்.  இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

இருப்பினும், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசி அதை அவர் தனது முகநூல் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பி உள்ளார். 

இதையடுத்து டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நாட்டில் வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. 

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இதனை டொனால்டு டிரம்ப் தனது முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என்று பதிவிட்டு அதனுடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

donald trump facebook and you tube pages run after two years


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->