வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு: வேளாண் கொள்கையை மேம்படுத்த அவசர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத ஏவுகணை சோதனையால் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியாவில் கொரோனா பெருந்தொற்றுக்குபின் உணவு பாதுகாப்பின்மையால் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் உணவு பற்றாக்குறை மற்றும் பட்டினியால் பலர் இறந்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்சம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உணவு பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும், முறையான வேளாண் கொள்கையை அமைப்பதற்கும் வடகொரியா அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உணவுப் பிரச்சனையை தீர்க்கத் தவறினால், கிம் ஜாங் தனது அணுசக்தித் திட்டத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது என்றும், அணுசக்தி திட்டங்களுக்கு பொதுமக்களின் மத்தியில் ஆதரவை இழக்க நேரிடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Discussion to improve agri policy due to food crisis in north korea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->